இயக்கம் – திலீப் குமார்
இசை – ஜிப்ரான்
வெளியான தேதி – 8 ஜனவரி 2021
நேரம் – 2 மணி நேரம் 29 நிமிடம்
மதிப்பீடு – 3.25 / 5
மாறா திரைப்படமானது மக்களால் மிகவும் விரும்பப்பட்ட 2015 மலையாள திரைப்படமான சார்லியின் ரீமேக் ஆகும், ஆனால் அதன் இயக்குனர் கூறியது போல, இது சில வழிகளில் ஒரு “தழுவல்” ஆகும். பார்வதி(ஷ்ரத்தா ஸ்ரீநாத்) என்ற இளம் பெண், கேரளாவின் மீன்பிடி குக்கிராமத்தின் சுவர்களில் குழந்தையாக கேள்விப்பட்ட கதையின் ஓவியங்களைக் காண்கிறார், அங்கு அவர் வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் , அவள் அந்த இடத்திலுள்ள பலரின் வாழ்க்கையைத் தொட்டதாகத் தோன்றும் மர்ம கலைஞரான மாறாவை (மாதவன்) கண்டுபிடிப்பதற்காக புறப்படுகிறாள்.தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துகுமார் ஆகியோரின் ஒளிப்பதிவு, காட்சிகளின் அரவணைப்பை அதிகரிக்கும் வண்ணம் இருந்தது.படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன .ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது பாத்திரத்தில் உறுதியானவராகவும் , மேலும் மாராவின் ஓவியங்களில் தடுமாறும் போது பாருவின் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் மிகவும் நுட்பமானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதவன் வழக்கம்போல் தனது நடிப்பில் அசத்தியுள்ளார்.மாறா மற்றும் பார்வதி இடையிலான காட்சிகள் மிகவும் குறைவு .
துணை நடிகர்கள் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளனர், குறிப்பாக மவுலி மற்றும் அலெக்சாண்டர் பாபு ஆகியோர் நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது .
இயக்குனர் திலீப் குமார் தனது சொந்த முத்திரையை பதிக்க முயற்சி செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார் .
படத்தின் இறுதி காட்சிகள் மனதை வருடும்படி அமைந்துள்ளன.
சார்லியை பார்க்காமல் மாறா வை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் மிகச்சிறந்த படமாக அமையும் .மற்றவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் தராது .
கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.